குண்டா இருக்கோம்னு கவலை படுரீங்களா? அதனை சரி செய்ய வழி என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
சூப் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – ஒன்று
கேரட் – இரண்டு டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
வெள்ளை பூசணிக்காய் – 200 கிராம்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
முதலில் வெள்ளை பூசணியின் தோலை நீக்கி , அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கேரட்டை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும். உடலுக்கு குளுர்ச்சியூட்டும் சூப் ரெடி.