சூரரைப் போற்று பட நடிகை அபர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வருடம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி.
இவர் 8 தோட்டாக்கள் ,சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் அபர்ணா இருக்கும் இந்த பபுகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர் .