பிரபல தொகுப்பாளினி ஜாக்லினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை வீஜே ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்லின் . இதை தொடர்ந்து இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6, 7, 8 உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படத்தில் ஜாக்லின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் .
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்லினின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் ஜாக்லின் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர் .