நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
அதன்படி தானிய வகை களிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது. உணவில் காராமணியை சேர்த்து வந்தால் அதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. மேலும் இது உடல் சோர்வை நீக்கி நல்ல தூக்கத்திற்கு வழி வகை செய்கிறது.