உடல் தெரியும்படி உடை அணியும் மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமாக தண்டனை கொடுக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் பள்ளியில் மாணவ மாணவிகள் தங்கள் உடல் பாகம் வெளியில் தெரியும்படி உடை அணிந்தால் அவர்களுக்கு வெட்கச் சட்டை என ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழங்கால் வரை நீளம் இருக்கும் அந்த சட்டையில் நான் சரியாக உடை அணிந்து உள்ளேன் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த விநோத தண்டனையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக சிக்குகின்றனர். 2 மாணவர்கள் மட்டுமே இதுவரை இந்த தண்டனையை அனுபவித்து இருக்கும் நிலையில் மொத்தம் 10 மாணவிகள் இந்த தண்டனையை பெற்றுள்ளனர். இந்த வினோத தண்டனைக்கு மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.