மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மேற்கு எஸ்.பி.ஐ காலனியில் செந்தில் முருகன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் செந்திலின் மகள் ஸ்ரீநிதி(11) உடல்நலக் குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த செந்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.