நடிகர் மகேஷ்பாபு தாயார் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு முன்னாள் முன்னணி திரைப்பட நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். இவர் தன்னுடைய தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ராஜாகுமாருடூ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிகை நம்ரதா சிரோத்கர் என்பவரை விரும்பி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இவரின் தயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார்.
இந்த நிலையில் மகேஷ் பாபுவின் தாயாருக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்திரா தேவியின் இறுதி ஊர்வலம் நாளை மகா பிரஸ்தானத்தில் நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.