உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் யானை ஒன்று உடல்நலம் சரி இல்லாத நிலையில் படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை பார்வையிட்டனர்.
அதன்பின்னர் வனத்துறையினர் யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை சாப்பிடவில்லை. இந்நிலையில் வனத்துறையினர் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.