தமிழக சட்டசபையில் இன்று மருத்துவ மற்றும் மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் மருத்துவ துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழக மக்களின் உடல் நலம் பேண “சற்றே குறைப்போம்” என்ற திட்டத்தின் மூலம் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிவதற்கு 4 கோடியில் சென்னையில் மரபணு ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னைக்கு பக்கத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். டாம்ப்கால் மருந்துகள் அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.