ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருணாசலத்தின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருணாச்சலம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாச்சலத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.