சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகில் பல இடங்களில் கொரோனா பரவி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பல உலக நாடுகள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி போட தொடங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வாருங்கள் என்று கூறியிருந்தார். இதையடுத்து இன்று கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இவர் அந்த பதிவில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்க்கு தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.