Categories
அரசியல் மாநில செய்திகள்

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

தாய்மொழி தின வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

உலகில் வாழும்  அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்க 21ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1999-ம் ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி நாள் என்று யுனெஸ்கோ அறிவித்தது. உலக அமைதியை நிலைநாட்டவும் , பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளையும் பாதுகாக்க உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் , ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்! அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |