Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் வலிமை பெற… மேத்தி கீரை சூப் குடிங்க…!!!

மேத்தி கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை                  – ஒரு கப்
பெரிய வெங்காயம்          – 1
தக்காளி                                  – 1
சோள மாவு                            – 1/2 டீஸ்பூன்
பூண்டு                                      – 2 பல்
வெண்ணெய்                        – சிறிதளவு
காய்ச்சிய பால்                   – அரை டம்ளர்
மிளகுத்தூள், உப்பு            – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் 1 கப் வெந்தயக் கீரை, 1 வெங்காயம் மற்றும் 1 தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது வெண்ணெயை விட்டு, அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் தேவையான தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் நிலையில், அதனுடன் 1 கப் வெந்தயக் கீரை மற்றும் 2 பல் பூண்டினை சேர்த்து கொதிக்க விடவும்.

அதனை தொடர்ந்து, காய்ச்சிய பாலுடன் சோள மாவை கரைத்து கொத்திகின்ற சூப்பில் சேர்க்கவும். பின்பு அனைத்தும் ஒன்று சேர்ந்து கொதித்ததும், அடுப்பை அணைக்கவும்.

இறுதியில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இப்போது மேத்தி கீரை சூப் ரெடி.

Categories

Tech |