ஆட்டுக்கால் பாயா என்றாலே முதலில் வந்து நிற்பது அதன் அபார ருசி தான். இதில் பெப்பர்சேர்த்து தரும்போது அதன் சுவையோடு அலாதிமணமும் இணைந்து கொள்கிறது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 2.
தக்காளி – ஒரு கையளவு(நறுக்கியது).
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்.
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்.
பச்சை மிளகாய் – 10 கீறியது.
பூண்டு – ஒரு கையளவு.
மிளகு – 4 டீஸ்பூன் (குருணையாக அரைக்கவும்).
தேங்காய் – 1/4 மூடி (அரைத்து பால் எடுக்கவும்).
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
ஆட்டுக்காலை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், போதுமான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 10 நிடங்கள் கழித்து 10 விசில் வந்ததும் கால் வெந்ததைப் பார்த்து, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிதுநேரம் கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
பாயாவை இறக்குமுன் குருணையாக அரைத்து வைத்திருக்கும் மிளகை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது பெப்பர் பாயா ரெடி.