திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை செய்கிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பரப்புரை செய்ய வருவதை ஒட்டி உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.
ஓபிஎஸ் வருகைக்காக பொதுமக்கள் மூன்று மணி நேரமாக காத்திருந்த நிலையில் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக விழா மேடையில் நடன கலைஞர்களின் நடனங்களை கண்டு பொதுமக்களை எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர் அதிமுக நிர்வாகிகள். நடன கலைஞர்கள் விழா மேடையில் நடனம் ஆடினாலும் பொதுமக்களும் ஆடி மகிழ்ந்தனர்.