மளிகை கடையின் பூட்டை உடைத்து 22,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாளமுத்துநகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் கடையை திறக்க முத்துசாமி வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனைதொடர்ந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 22,000 பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துசாமி உடனடியாக தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.