ஜெர்மனியில் பள்ளியின் கதவை உடைத்து 3 கொள்ளையர்கள் தூங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் Freiburg நகரில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 3 இளைஞர்கள் வகுப்பறையின் கதவை உடைத்து தூங்கிகொண்டிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று காலையில் வழக்கம்போல பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் வகுப்பறைக்கு சென்ற போது மூன்று பேர் அங்கு தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு சத்தம் போடாமல் அமைதியாக ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடித்து விட்டு இந்த 3 பேரும் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையின் கதவுகளை உடைத்து தூங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிந்து அவர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.