Categories
தேசிய செய்திகள்

“உடைக்க முயற்சி செய்தே சார்… ஆனா உடையவே இல்லை”… ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது…!!!

பெங்களூரு மாநிலம், பத்ராவதி என்ற இடத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிவமொக்க மாவட்டம், பத்ராவதி டவுன் பி.எச்.சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இதில் கடந்த ஐந்தாம் தேதி மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் அவரால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயலவில்லை. இதனால் அங்கிருந்து தப்பிவிட்டார். மறுநாள் காலையில் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோது அங்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் வங்கி மேலாளருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் ஏடிஎம் மையத்தில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவம் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில் ஏடிஎம்மில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் அதே பகுதியை சேர்ந்த அசாதுல்லாஹ் என்பது தெரியவந்தது.

Categories

Tech |