சத்தான நாட்டுக்கோழி முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு. ஆஹா என்ன… ருசி..!!
தேவையான பொருட்கள்:
தக்காளி – 5
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 5 6
பச்சை மிளகாய் – 2
நல்ல எண்ணெய் – நாலு ஸ்பூன்
லவங்கம் – 2
சோம்பு – ஒரு ஸ்பூன்
பட்டை – 2
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
முட்டை – 5
செய்முறை:
இஞ்சி, தக்காளி, மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.. பூண்டு உரித்து வைத்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் லவங்கம், சோம்பு, பட்டை இவை அனைத்தையும் போட்டு நன்றாக கிளற வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் இவையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். கறிவேப்பிலை தேவையான அளவு போட வேண்டும்.
அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி அதனுடைய பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்குங்கள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் பொடி, உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்கு கிளறிவிடுங்கள். அரை கப் தண்ணீர் அதனுள் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்த பின்னர் அடுப்பு தீயை குறைவாக வைத்து கொண்டு முட்டையை உடைத்து குழம்பில் ஊற்றுங்கள், மிதமான சூடாக இருக்கும் பொழுதுதான் முட்டை உடைத்து ஊற்ற வேண்டும். இல்லையென்றால் முட்டை முழுமையாக இல்லாமல்ருசி கேட்டு போய்விடும்..
இப்பொழுது சுவையான முட்டை குழம்பு ரெடி…!