பிரபல கால்பந்தாட்ட வீரர் Sadio Mane கடந்த 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி செனகல் செதியோவில் உள்ள பம்பாலியில் பிறந்தார். இவர் சிறந்த FIFA ஆண்கள் வீரருக்கான விருதை 2 முறை பெற்றுள்ளார். இவர் 2020-ம் ஆண்டு நியூ ஆப்பிரிக்கன் இதழால் மிகவும் செல்வாக்குமிக்க 100 ஆப்பிரிக்கர்களில் ஒருவராக புகழப்பட்டார். இவருடைய 7 நாள் வருமானம் 1 கோடியே 2 லட்சம் ஆகும். இந்நிலையில் மானே தன்னுடைய மொபைல் ஸ்கிரீனின் டிஸ்ப்ளே உடைந்தும் அதை மாற்றாமல் இருக்கிறார். இது குறித்து மானேவிடம் ஒரு இன்டர்வியூவில் தொகுப்பாளி ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு மானே எனக்கு வரும் வருமானத்தை வைத்து 3 பெராரி கார், 3 விமானம், வைர வாட்ச் போன்ற பொருட்களை வாங்க முடியும். ஆனால் நான் சிறுவயதில் பள்ளிக்கு கூட போக முடியாமல் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்துள்ளேன்.
என்னைப் போன்று பள்ளிக்கு கூட செல்ல முடியாமல் யாரும் கஷ்டப்படக் கூடாது என நான் நினைக்கிறேன். இதனால் என்னுடைய வருமானத்தை வைத்து நாட்டில் உள்ள பல மாணவர்களை படிக்க வைக்கிறேன். அதன்பிறகு கால்பந்து விளையாடும் மாணவர்களுக்கு வேண்டிய பண உதவிகள் அனைத்தையும் செய்து வருவதாகவும் கூறினார். மேலும் மானே தன்னுடைய சொந்த மாநிலத்தில் கால்பந்து விளையாடுபவர்களுக்கு மாதந்தோறும் 70 டாலர்கள் இலவசமாக வழங்குகிறார். மேலும் பணம் கையில் வந்து விட்டால் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு கால்பந்தாட்ட வீரர் தன்னுடைய உடைந்து போன மொபைல் போனை கூட மாற்றாமல் ஏழை மாணவர்களுக்கு செய்யும் உதவிகளை பார்க்கும் போது அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.