Categories
மாநில செய்திகள்

உடைந்து விழுந்த புதிய அணை : ரூ25,00,00,000யில் ஊழல்…. மேலும் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

தென்பெண்ணை அணை உடைப்பு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த 23-ம் தேதியன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி . அப்போது அதிமுகவினர் கமிஷனுக்காக தரமற்ற முறையில் தடுப்பணை கட்டி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து அணை கட்டுமானத்தினை தரமற்ற நிலையில் கட்டிய உதவி உதவி செயற்பொறியாளர் பி.சுமதி, செயற்பொறியாளர் எ. ஜவஹர், கண்காணிப்பு பொறியாளர் எம். சுரேஷ், தலைமை பொறியாளர் கே.அசோகன் போன்றோரின் மீது தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதி 17 (ஈ) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 25 ஆம் தேதி  தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஜெகதீசன், ஞானசேகர் ஆகிய இருவர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |