சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரியை சேர்ந்த சர்மா என்பவர் மின்ட் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி சீமா ஷர்மா. இவர்களுக்கு ரோஷினி சர்மா என்ற மகள் உள்ளார் .இவர் வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி திறந்த முதல் நாள் நேற்று காலை 8 மணிக்கு ரோஷினி சர்மா கல்லூரி சென்றார். அப்போது 4-வது மாடிக்கு சென்ற அவர் மீண்டும் வகுப்புக்கு வரவில்லை. அதன் பிறகு அந்த வழியாக வந்த பேராசிரியர் ஒருவர் ரோஷினி சர்மா ரத்த வெள்ளத்தில் மயங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் இட்டார்.
கல்லூரி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இந்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். இது தொடர்பாக வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் அங்கு வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சோதனை செய்தபோது ரோஷினி சர்மாவின் பற்கள் உடைந்து இருந்தது. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தாரா என்பது தெரியவில்லை. பலத்த காயமடைந்த அவர் 20 நிமிடம் அங்கேயே உயிருக்கு போராடியுள்ளார். முன்பே யாராவது பார்த்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். இந்நிலையில் போலீசார் ரோசினி சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கல்லூரி தொடங்கிய முதல் நாளை ஒரு மாணவி இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பற்கள் உடைந்துள்ளது.