Categories
தேசிய செய்திகள்

உடை மாற்றிய 17வயது சிறுமி…. வீடியோ எடுத்த 23…. அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்டணா கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் துணி மாற்றும் போது அப்பகுதியை சேர்ந்த  அனில் நாயக்(வயது 23) என்பவர் ஜன்னல் வழியாக அப்பெண் ஆடை மாற்றுவதை பார்த்துள்ளார். மேலும் தனது செல்போனில் வீடியோ எடுத்ததுமட்டுமல்லாமல் அதை வைத்து அப்பெண்ணை மிரட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அவரது வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனில்நாயக், அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர் பாலா நாயக் உடன் சிறுமியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளனர். அந்த நான்கு பேரும் சேர்ந்து  அப்பெண்ணை மிரட்டி நான்கு மாதமாக கற்பழித்து வந்துள்ளனர்.

இது குறித்து அச்சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே, அவர்கள் காவல்நிலையத்தை புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் அனில்நாயக் மற்றும் பாலாநாயக் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் துறையினர் அச்சிறுமியை மீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலபாதுகாப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |