Categories
பல்சுவை

உட்கார்ந்தே இருக்கீங்களா….? புகைப்பழக்கத்தை விட ஆபத்தானது…. ஆய்வு கூறும் தகவல்….!!

இன்றைய காலகட்டத்தில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இருக்கின்றனர். இதனை உட்காரும் வியாதி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆங்கிலத்தில் இது ‘சிட்டிங் டிஸீஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ஒயிட் காலர் ஜாப் பணியாளர்கள் தினமும் 7 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்கின்றனர். சமீபத்தில் லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், அலுவலக வேலை பார்ப்பவர்களை விட பேருந்து ஓட்டுநர்கள்  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உட்கார்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால்தான் லண்டன் ஓட்டுநர்களில் 74 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் உடல் பருமனால் சிரமப்படுகின்றனர். விடுமுறை நாட்களில் நாம் டிவிக்கு முன்பு உட்கார்ந்து இருக்கிறோம். இதனை knock-off-Effect என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டிவி முன்பு நாம் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை 18 சதவீதம் அதிகரிக்க செய்கிறது. ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து இருந்து விட்டு 1 மணி நேரம் மட்டும் உடற்பயிற்சி செய்வது எந்த விதத்திலும் பயனளிக்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களை Active Couch Potato என்று அழைக்கின்றனர்.

இந்நிலையில் 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து இருக்கும் போது உடலில் மெட்டபாலிசம் என்ற கலோரிகள் எரிக்கும் திறன் குறைந்து விடுவதால் தேவையற்ற கலோரிகள் சேர்ந்து விடுகிறது. எனவே 20 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து நடப்பது அவசியம். மேலும் சின்ன சின்ன பயிற்சிகள், மாடி ஏறுதல் போன்றவற்றை செய்யலாம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 முதல் 10 நிமிடம் நடப்பதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அலுவலக வேலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் உட்கார்ந்திருப்பது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் செல்போனில் பேசர் பெடோமீட்டர் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் 1 மணி நேரத்திற்கு சுமார் 500 அடிகளாவது நாம் நடக்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். எந்த வேலை இருந்தாலும் அப்படியே உட்கார்ந்து இருக்காமல் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Categories

Tech |