கர்ப்பிணி பெண்ணை அமர விடாமல் மருத்துவர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற கர்ப்பிணி பெண் காலில் அடிபட்டதால் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு இரவு நேர பணியில் டாக்டர் பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் கர்ப்பிணி பெண்ணை தள்ளி நிற்குமாறு திட்டியதோடு, படுக்கையில் ஏறி படுக்க சொல்லியுள்ளார். ஆனால் படுக்கை உயரமாக இருந்ததால் கர்ப்பிணிப் பெண்ணால் ஏற முடியவில்லை. இதனால் அருகில் இருந்த ஒரு ஸ்டூலில் உட்கார சென்றுள்ளார்.
அப்போது பாலகிருஷ்ணன் அந்த ஸ்டூலை எட்டி உதைத்ததோடு கர்ப்பிணி பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களும் கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குடும்பத்தையும் அசிங்கமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இந்த சம்பவத்தை மருத்துவமனையில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.