Categories
சினிமா தமிழ் சினிமா

“உணரவில்லை” கோவிலில் செருப்பு அணிந்திருந்த நயன்தாரா…. மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்….!!!!

திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதியில் சாமி தரிசனம் செய்யச் சென்ற நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி சர்ச்சையில் சிக்கினர். கோவில் வளாகத்தின் மாடவீதியில் காலணி அணிய தடை உள்ள நிலையில் நயன்தாரா காலணி அணிந்து வந்தார். மேலும் கோவில் வளாகத்தில் காலணிகளுடன் இருவரும் போட்டோ ஷூட் நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நயன்தாரா காலணி அணிந்து வந்த வீடியோ வைரலானதை அடுத்து இது சர்ச்சையை ஆகியது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினோம். தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் நடந்தது. கோயில் வளாகத்தில் போட்டோ ஷூட் எடுத்த போது செருப்பு அணிந்து இருந்ததை உணரவில்லை என்று கூறினார். இவ்வாறு திருப்பதி கோயில் வளாகத்தில் செருப்பு அணிந்து சென்றது குறித்து விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார்.

Categories

Tech |