அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.
இதைத்தொடர்ந்து அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அம்மா உணவகத்தில் மீண்டும் பெயர் பலகையை வைக்கவும், தொண்டர்கள் இருவரையும் கழகத்திலிருந்து நீக்கவும் கூறியுள்ளார்.