தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கினை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க யாருமில்லாததால் அவ்விலங்குகள் உணவின்றி வாடி வருகின்றன.
இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின்படி, கொரோனா ஊரடங்கினாள் உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவு வழங்க நிதி ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.