Categories
உலக செய்திகள்

உணவின்றி பேரழிவு …1,30,0000 மக்கள் அவதி …. ஐநா அமைப்பின் எச்சரிக்கை….!!!

ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளில் வரட்சி காரணமாக பேரழிவு ஏற்படும் என ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பசியில் தவிப்பதாகவும் 15 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், தானிய விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஐ.நா உணவு அமைப்பின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ரீன் பால்சன் தெரிவித்தார்.

உணவின்றி வாடும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உதவ உடனடியாக 130 மில்லியன் டாலர்கள் தேவை எனவும் அவர் தெரிவித்தார். “ஐரோப்பாவின் கொம்பு” என அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பகுதியில் பருவமழை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பெய்துள்ளதால் அங்கு கடும் வரட்சி நிலவி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |