ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மடப்புரம், ஆக்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மருத்துவ குடியிருப்பு, பழைய கால்நடை மருத்துவ கட்டிடம், நீர்த்தேக்கத் தொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள சத்துணவு கூடம் மற்றும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு செய்துள்ளார். பின்னர் சத்துணவில் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரத்தை குறித்து ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர். நெல்லை பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை போல் மற்ற இடங்களில் நடக்காமல் இருப்பதற்காக மயிலாடுதுறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.