குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற நகரில் உணவில் கூடுதலாக உப்பு இருந்ததால், கணவர் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கி, அவரது தலையை மொட்டை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அவரது மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி, கணவர் உணவில் உப்பு கூடியதால், இரக்கமின்றி ரேசரை எடுத்து தனது தலையை மொட்டை அடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கொடூர கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.