Categories
லைப் ஸ்டைல்

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க… சில எளிய டிப்ஸ் இதோ…!!!

வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால், விரைவில் கெட்டுப்போகாது. ஒரு கைப்பிடி கல் உப்பை, சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டுவைத்தால் பூச்சி அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால், கரிப்பு குறையும்.

எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும். சர்க்கரை டப்பாவில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால், எறும்பு வராது. மீந்த இடியாப்பத்தை தயிரில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸின் தண்டு, அவ்வளவு சத்து நிறைந்தது. கோஸைச் சமைத்துவிட்டு அதன் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்துச் சமைக்கலாம். தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க, சிறிய தேங்காய்த் துண்டை அதனுள் போட்டு வைக்கலாம்.

Categories

Tech |