மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் சில்லறை பணவீக்கமானது அதிகரித்துள்ளது. அதன்படி 7 சதவீதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சில்லரை பணவீக்கம் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் தான் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காய்கறிகள், மசாலா பொருட்கள், விளக்குகள், எரிபொருள் மற்றும் காலணிகள் போன்றவற்றின் விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. முட்டை விலை மட்டும் தான் சற்று குறைவாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததை விட நுகர்வோர் விலை குறையீடு அதிக அளவில் இருக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 2.4 சதவீதமாக தொழில்துறை உற்பத்தி இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்பாடு தான் காரணம்.