உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தடுப்புகள் மீது ஏறிய நடிகை நக்மா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை நக்மா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் எரிபொருள் விலை ஏற்றத்தால் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.