Categories
உலக செய்திகள்

உணவு அளிக்க மறுத்த தாய்…. தலீபான்களினால் உயிரிழப்பு…. கண்ணீருடன் தெரிவித்த மகள்….!!

உணவு அளிக்க மறுத்த பெண்ணை தலீபான்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் Najia என்பவர் தனது குடும்பத்துடன் ஒரு குட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவர்கள் இருந்த கிராமத்திற்குள் தலீபான்கள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற பயத்திலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 12-ஆம் தேதியன்று Najia வீட்டின் கதவை தலீபான்கள் தட்டியுள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் குழுவில் உள்ள 15 பேருக்கு உணவு சமைத்து கொடுக்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால் Najia மறுப்புத் தெரிவித்ததுடன் தனது குடும்பத்தின் ஏழ்மை சூழலையும் எடுத்துக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தலீபான்கள் நான்கு குழந்தைகளுக்கு தாயான அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கடுமையான தாக்குதலினால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரின் மகளான 25 வயதுடைய Manizha கூறியதில் “எங்கள் வீட்டை மூன்று முறை தட்டியும் நாங்கள் திறக்கவில்லை. மேலும் நான்காவது முறை தட்டி உணவு கேட்டனர். ஆனால் நாங்கள் உணவு அளிக்க மறுத்ததால் தலீபான்கள் இச்செயலில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி அந்த பகுதியை விட்டு வெளியேறும் போது தலீபான்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டுச் சென்றதாகவும் அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

Categories

Tech |