லெபானின் கடந்த 7 நாட்களாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லெபானானது ஆறு மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். இங்கு 2019 இல் ஆரம்பித்த நிதி நெருக்கடியால் அந்த நாட்டு மக்கள் பாதி பேர் வறுமை நிலைக்கு உள்ளாகினர். இதனால் வேலை வாய்ப்புகள் மற்றும் சேமிப்புகள் இல்லாமல், நுகர்வோர் வாங்கும் சக்தியும் குறைந்தது.
இதே போல பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து , பண மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. லெபனான் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நிலையில், பண மதிப்பு மிகவும் குறைந்ததால் பொதுமக்கள் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரான பெய்ருட்டுக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தியதோடு, சாலைகளின் நடுவே டயர்களை கொளுத்தி போக்குவரத்து தடையை உண்டாக்கினர். அதே போல நாட்டின் மத்திய வங்கியின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காண அரசு முன் வராவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் மோதல்கள் ஏற்பட்டு, நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.