நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நாம் தினமும் சாப்பிடும் உணவு களை நேரம் தவறி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் ஏற்படும். அதில் மிக கவனம் செலுத்த வேண்டும்.
காலை உணவுக்கு ஏற்ற நேரம்
மிகச் சரியான நேரம் 7 முதல் 8 மணிக்குள்
தாண்டக்கூடாது நேரம் 10 மணி
நினைவில் கொள்ளுங்கள்- தூங்கி எழுந்து அரை மணி நேரத்திற்குள் காலை உணவு சாப்பிட வேண்டும்.
மதிய உணவுக்கு ஏற்ற நேரம்
மிக சரியான நேரம் 12.30 முதல் 2 மணிக்குள்
தாண்டக்கூடாது நேரம் 4 மணி
நினைவில் கொள்ளுங்கள்- காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமான இடைவெளி இருக்கக்கூடாது.
இரவு உணவுக்கு ஏற்ற நேரம்
மிக சரியான நேரம் 6 முதல் 8 மணிக்குள்
தாண்டக்கூடாது நேரம் 10 மணி
நினைவில் கொள்ளுங்கள்- தூங்க செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவு சாப்பிட வேண்டும்.
இவற்றை தவிர்த்து நேரம் தவறி சாப்பிடுவதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொரு நேரமும் சரியாக உணவு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.