தமிழகத்தில் மீன்களில் ரசாயன பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தேனி மாவட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்து விற்கப்பட்ட 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் ரசாயனம் கலந்த மீனை விற்ற விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.