தாய்லாந்தில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு மிகவும் அரிதான முத்து ஒன்று அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது.
தாய்லாந்தில் வடகிழக்கு புரிமாகாணத்தில் வசித்து வரும் காவல்துறை அதிகாரி Lieutenant Colonel Phongsakorn Chantana என்பவரும், அவருடைய மனைவியும் இரவில் வறுத்த கடல் நத்தைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த காவல்துறை அதிகாரியின் வாயில் சோள விதை அளவிற்கு ஏதோ ஒன்று உருண்டையாக சிக்கியுள்ளது. அதனை உணர்ந்த அவர் வாயில் இருந்ததை வெளியே எடுத்து பார்த்தார். அப்போது அது அரிதான மொலே முத்து போன்று இருந்தது. இதையடுத்து அவர் அந்த முத்தை உற்று நோக்கி பார்த்த போது அது மொலே முத்து தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த முத்து உலகிலேயே மிக அரிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்று என்பதால் அதை விற்றால் பல மடங்கு போகும் என்று கூறப்படுகிறது. இது போன்ற முத்துக்கள் கடந்த காலத்தில் 250000 பவுண்ட் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதால் தற்போதும் அந்த முத்து அதே விலைக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது மொலோ முத்து தானா என்று உறுதிப்படுத்துவதற்காக அருகில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்க அந்த தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த காவல்துறை அதிகாரி கூறுகையில், இது மெலோ முத்து தான் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த முத்து முன்பு பார்த்ததை விட சிறிதாக காணப்படுவதால் இதனை உறுதி செய்து கொள்வதற்காக நாங்கள் பரிசோதனைக்கு அனுப்ப உள்ளோம். அந்த பரிசோதனையில் அது மெலோ முத்து என்று உறுதி செய்யப்பட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். மேலும் நாங்கள் அந்த முத்தை அதிர்ஷ்டமாக நினைத்து வைத்து கொள்ளவோம் என்று கூறியுள்ளார். இந்த வகை முத்துக்கள் தாய்லாந்து, தென் சீனக்கடல், வியட்நாம், மியான்மர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது.