Categories
லைப் ஸ்டைல்

உணவு சாப்பிட்ட பிறகு இந்த 4 விஷயத்தை செய்யாதீங்க… அது மிகவும் ஆபத்து… எச்சரிக்கை…!!!

நீங்கள் உணவுகளைச் சாப்பிட்டவுடன் இதனை செய்தால் மிகப் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரிடும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் உணவுகளை சாப்பிட்ட பிறகு சில விடயங்களை செய்வது மிகவும் ஆபத்தில் முடியும்.

அப்படி செய்தால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாப்பிட்ட பிறகு தூங்கவே கூடாது. பொதுவாக செறிமான பணியின் போது சாப்பாடு குடல் பகுதிக்கு செல்லும். எந்த சமயத்தில் தூங்கினால் குடல் வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேல் எழும்பும். பழக்கத்தை தொடர்ந்தால் நெஞ்செரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். இதனையடுத்து சாப்பிட்ட பிறகு குளிக்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள். சாப்பிட்ட உடன் செரிமானம்

பணிகள் உடலில் தொடங்கிவிடும். குளியலின் போது உடல் உஷ்ணமும் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக உடலின் மேற்புறத்தில் சுறுசுறுப்பாக ரத்த ஓட்டம் இருக்கும். அப்போது வயிற்றுப் பகுதியில் உள்ளரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாக செல்லும் போது செரிமான பணிகள் பாதிக்கும். இதனையடுத்து சாப்பிட்ட பிறகு புகைப்பிடித்தால் கெடுதல் அதிகம். சாப்பிட்ட பிறகு ஒரு சிகரெட் பிடித்தால் அது 10 சிகரெட்டுக்கு சமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சாப்பிட்டவுடன் கடுமையான வேலைகள் மற்றும் கடும் உடற்பயிற்சி செய்தால் செரிமானத்திற்கு தேவையான சக்தி கிடைக்காது. செரிமானம் ஆகும் சிறு உணவும் உடல் முழுக்க போய் சேராமல் தடுக்கப்படும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்து சக்தியும் வெகு எளிதாக குறைந்து விடக்கூடும். இதனால் மிகப் பெரிய ஆபத்துகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அதனால் சாப்பிட்டவுடன் இதனை செய்யாதீர்கள்.

Categories

Tech |