கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்மை துறை அமைச்சர் மங்கள அமரவீரவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலங்கையின் உணவு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென அமைச்சர் மகிந்தா அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.