Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உணவு டெலிவரிக்காக சென்ற ஊழியர்…. வழியில் மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (25). இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இவர் கணபதி பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு காந்திபுரம் திரும்பினார். இதையடுத்து அவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் வந்தபோது சாலையின் ஓரத்தில் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்தார். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதன்பின் அந்த 3 பேர் திடீரென முருகேசனிடம் சென்று பணம் கேட்டனர். அதற்கு அவர் என்னிடம் பணமில்லை என்று கூறினார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியதுடன், அவரிடமிருந்து செல்போன் ரூபாய்.9,050 மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்மஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் சென்ற 11-ஆம் தேதி பாப்பநாயக்கன் பாளையத்தில் இளைஞரை தாக்கி மோட்டார்சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இப்போது மீண்டும் அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆகவே இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Categories

Tech |