ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக ராமகிருஷ்ணா மிஷன் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ் வழி கல்வி பயில விண்ணப்பிக்கலாம். இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, தங்குமிடம், கல்வி அனைத்தும் இலவசம் என ராமகிருஷ்ணா மிஷன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.