வடகொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன என்று ஐநா சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. உணவு பற்றாக்குறை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன் பிறகு வட கொரியாவில் இறைச்சிப் பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்த்துக் கொண்டிருக்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் செல்ல பிராணியான நாய் கலை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, நாய்களை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரிமுதல் செய்யப்படுகின்ற நாய்களில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்கா அல்லது ஏற்று உணவகங்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.