Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்கள்… அதிகாரிகள் பறிமுதல்..!!

சிவகங்கையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ கொண்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே குடான் ஒன்று உள்ளது. அந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பொருளான புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையில் குழுவினர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு வந்து சோதனை நடத்தினர்.

அப்போது அந்த குடோனில் சுமார் 220 கிலோ அளவிலான ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் அந்த புகையிலை பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |