உணவு பொட்டலத்திற்காக ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளரை மற்றொரு தொழிலாளி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முதலியார்சத்திரத்தில் வாழ்ந்து வருபவர் சங்கர். இவர் குட்ஷெட் யார்டில் லாரி ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம் செல்வம் என்கிறவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகின்றார். சென்ற 23ஆம் தேதி வேறொரு லாரி ஒப்பந்ததாரர் இருந்ததால் அவரின் இறுதிச் சடங்கிற்கு தொழிலாளர்கள் அனைவரும் சென்ற 23ஆம் தேதி சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் அங்கு உணவு விற்கும் பெண் ஒருவர் விஜயன் என்பவருக்காக உணவு பொட்டலத்தை அங்கிருக்கும் டீக்கடை ஒன்றில் அவர் வந்தால் கொடுத்து விடுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் விஜயன் வந்து உணவு பொட்டலத்தை கேட்ட பொழுது அவருடன் பணியாற்றும் தொழிலாளியான பழனிவேல் என்பவர் வாங்கி சாப்பிட்டு விட்டதாக கூறி இருக்கின்றா.ர் இச்சம்பவத்தால் விஜயன் பழனிவேல் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு வந்த செல்வம் என்பவரும் பழனிவேலுக்கு ஆதரவாக பேசியதால் செல்வத்துக்கும் விஜயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கின்றது.
இதனால் விஜயன் செல்வத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின் நள்ளிரவு 11 மணியளவில் அந்த இடத்திற்கு மீண்டும் சென்ற விஜயன் தூங்கிக்கொண்டிருந்த செல்வத்தின் மீது உருட்டு கட்டையால் தலையில் தாக்கியதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் விஜயன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இதனால் அப்பகுதி மக்கள் பாலக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். விரைந்து வந்த போலீஸார் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற விஜயனை வலைவீசி தேடி வருகின்றார்கள்.