Categories
லைப் ஸ்டைல்

உணவு பொருள் வாங்குறீங்களா….? இதுல ஜாக்கிரதையா இருங்க…!!

உணவுப் பொருட்களை வாங்கும்போது எப்படி பாதுகாப்பாக வாங்குவது என்பது பற்றிய தொகுப்பு.

ஆன்லைன் மூலமாக நீங்கள் உணவு பொருட்களை வாங்குபவராக இருந்தால் உணவு வாங்கும் தளத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.. அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள்  என்பதற்காக தெரியாத தளத்தில் எந்த பொருட்களையும் வாங்காமல் இருப்பது நல்லது.

எங்கு உணவு பொருட்களை வாங்கினாலும் தவறாமல் பில் வாங்க வேண்டியது அவசியம். உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பில்லை வைத்து மட்டும் தான் கேள்வி கேட்கமுடியும்.

புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் தளத்தில் உணவு பொருட்கள் வாங்க நினைத்தீர்கள் என்றால் அந்த தளத்தின் நம்பகத்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து கொண்டு ஆர்டர் செய்யலாம்.

எந்த உணவை வாங்கும்போதும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊட்டச்சத்து பட்டியலை சற்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் போலியான பொருட்களில் சில ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் மட்டுமே போடப்பட்டிருக்கும். ஆனால் அதே ஊட்டச்சத்துக்கள் உண்மையான உணவுப்பொருட்களில்  இல்லாமல் இருக்கும். எனவே பொருட்களை வாங்கும் முன்பு ஊட்டச்சத்து பட்டியலை பார்த்துக் கொள்வது அவசியம்.

உணவு பொருட்களை நாம் வாங்கும்போது அந்தப் பொருளின் பேக்கேஜ் செய்யும் தேதியை   ஆராயவேண்டும். போலியானவர்கள் உண்மைப் பொருளைப் போன்று பேக்கிங் செய்ய முடியாது . 100% சரியாக செய்ய மாட்டார்கள். நிறம், பாக்கெட் செய்யப்பட்டிருக்கும் முறை வடிவம் போன்றவற்றினால் போலியான உணவு பொருளை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

உணவு பொருட்கள் உண்மையானதாக இருந்தால் அதில் பாதுகாப்பு தன்மையை நிலைநிறுத்த ஹோலோகிராம், க்யூஆர் கோடு, ஸ்கேன் போன்ற வசதிகள் அடங்கியிருக்கும்.

முக்கியமாக பொருட்களை வாங்கும்போது அதன் உற்பத்தி தேதியும் காலாவதி தேதியும்  கவனிக்க வேண்டியது அவசியம்.

Categories

Tech |