Categories
லைப் ஸ்டைல்

உணவே மருந்தாக அத்திப்பழம்…. தினமும் 1 சாப்பிட்டால்…!!

அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே இரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.

நாள்பட்ட மலச்சிக்கலை குணபடுத்த 4 அத்தி பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

தினமும் 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழு கொழுவென்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

Categories

Tech |