Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா…!!

புகழ்பெற்ற மாசாணியம்மன் திருக்கோவில் உண்டியல் வருமானம் ரூபாய் 1 கோடி கிடைத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் ஆனைமலை பகுதியில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் மொத்தம் 22 உண்டியல்கள் உள்ளன. தற்போது மாசாணியம்மனுக்கு  குண்டம் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த வருமானம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக எண்ணப்ப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1 கோடியே 36 லட்சத்து 473 ரூபாய் இருந்துள்ளது. இதுதவிர 2.57 கிலோ வெள்ளி மற்றும் 372.250 கிராம் தங்கம் இருந்துள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணி நடைபெறும் போது கோவில் பார்வையாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன், அன்னூர் சரக ஆய்வாளர் மல்லிகா, தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன்  கோவில் உதவி ஆய்வாளர் ஹர்ஷினி, உதவி ஆணையர் கருணாநிதி ஆகியோர் இருந்துள்ளனர்.

Categories

Tech |