அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர் உண்டியல் திருட்டு குறித்து புகார் அளித்ததால் புகார் மனுவை பெற்ற காவல்துறை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த கோவிலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் திருட்டு ஏற்ப்பட்டதாகவும் உண்டியலில் ரூ.60 ஆயிரத்திற்கும் அதிகமான தொகை இருந்தாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.